Theme Check

இதனுடன் உறவு கொண்டாலும் பாலியல் பலாத்காரமே.. உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

இதனுடன் உறவு கொண்டாலும் பாலியல் பலாத்காரமே.. உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

இதனுடன் உறவு கொண்டாலும் பாலியல் பலாத்காரமே.. உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!
X

மேகாலயாவில் கடந்த 2006-ம் ஆண்டு 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 25,000 ரூபாய் அபராதம் அல்லது கூடுதலாக 6 மாதம் சிறைத் தண்டனையும் விதித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதை எதிர்த்து குற்றவாளி சார்பில் மேகாலயா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 14-ம் தேதி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
High Court against regulating entry of Indian citizens to Meghalaya
அப்போது, “இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டம் 375(பி) பிரிவில், பெண்ணின் உள்ளாடையை அகற்றாமல் உறவு கொண்டாலும் அது பாலியல் குற்றம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளி சரியான படிப்பில்லாமல் சராசரி அறிவுடையவராக இருப்பதாக, உணர்ச்சி வசப்பட்டு குற்றம் இழைத்து விட்டதாக வாக்குமூலம் அளிப்பதால் அவர் பாலியல் உறவு கொள்ளவில்லை என்று அர்த்தமாகிவிடாது.

பலாத்காரத்தின் போது, அந்த சிறுமி உள்ளாடை அணிந்திருந்ததாக வைத்துக் கொண்டாலும் கூட, உள்ளாடையை அகற்றாமல் உறவு கொண்டாலும் குற்றவாளி செய்தது பாலியல் பலாத்காரமே” என்று கூறி, விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை மேகாலயா உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

Next Story
Share it