இன்று பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இந்த டைமுக்கு வந்தால் போதும்..!!
இன்று பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இந்த டைமுக்கு வந்தால் போதும்..!!

இன்று தொடங்கவிருக்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் காலை 9 மணிக்கு வந்தால் போதும் என்று அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவலுக்கு பிறகு முதல் முறையாக பொதுத் தேர்வு நடைபெறுகிறது. அதன்படி, பிளஸ் 2 தேர்வு இன்று (மே 5-ம் தேதி) தொடங்குகிறது. அது போல் மே 6 முதல்10-ம் வகுப்புகளுக்கும் மே 10-ம் தேதி 11-ம் வகுப்புகளுக்கும் பொது தேர்வு நடைபெறுகிறது.
முன்னதாக தேர்வு எழுதவரும் மாணவர்கள் காலை 8 மணிக்கே வரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தேர்வுக்கு காலை 9 மணிக்கு வந்தால் போதும் என்று அறிவித்துள்ளது.
முன்னதாக 10, 11, 12-ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் மாஸ்க் அணிவது கட்டாயம் என்றும், தனி மனித இடைவெளிவிட்டு தேர்வு நடைபெற்றாலும் மாஸ்க் அணிந்து எழுதவேண்டும். தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் கண்காணிப்பாளர்களும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

