வாரத்தில் 3 நாள் மட்டும் ஆபீஸ் வந்தா போதும்.. இந்தியாவின் பிரபல நிறுவனம் அறிவிப்பு..!
வாரத்தில் 3 நாள் மட்டும் ஆபீஸ் வந்தா போதும்.. இந்தியாவின் பிரபல நிறுவனம் அறிவிப்பு..!

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை மற்றும் மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) தனது ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
அதன்படி, இந்த மாதம் முதல் டிசிஎஸ் நிறுவனம் உயர் அதிகாரிகளை மட்டும் அதாவது மொத்த ஊழியர்களில் சுமார் 8 சதவீத ஊழியர்களை மட்டும் வாரம் 3 நாட்களுக்கு கட்டாயம் அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற அறிவுறுத்தியுள்ளது,

மற்ற 2 நாட்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி வழங்கியுள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தின் 6 லட்சம் ஊழியர்களில் தற்போது 50000 ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்திற்கு வர உள்ளனர்.
இதன் மூலம், மற்ற 5.5 லட்சம் ஊழியர்களுக்கு அடுத்தச் சில காலம் வீட்டில் இருந்து பணியாற்ற உறுதியான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆனால் தொடர்ந்து இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்பதையும் ராஜேஷ் கோபிநாதன் தலைமையிலான டிசிஎஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

