Theme Check

இப்படி செய்தால் போதும், தேர்வில் வெற்றிதான்.. மாணவர்களுக்கு மோடி அட்வைஸ்..!

இப்படி செய்தால் போதும், தேர்வில் வெற்றிதான்.. மாணவர்களுக்கு மோடி அட்வைஸ்..!

இப்படி செய்தால் போதும், தேர்வில் வெற்றிதான்.. மாணவர்களுக்கு மோடி அட்வைஸ்..!
X

நாடு முழுவதும் தேர்வுக்கு தயாராகும் மாணவ - மாணவிகளுக்கு அறிவுரை வழங்கும் வகையில், தேர்வை எதிர்கொள்வதில் ஏற்படும் அச்சம் நீங்கும் வகையில் டில்லியில் உள்ள டாகடோரா ஸ்டேடியத்தில் இருந்து பரீக்ஷா பே சர்ச்சா என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், “தேர்வை எதிர்கொள்ளும் மாணவ - மாணவிகள், தேர்வின்போது அச்ச சூழலில் இருந்து விலகி இருக்க வேண்டும்.

நண்பர்களை பார்த்து காப்பி அடிக்கத் தேவையில்லை. முழு நம்பிக்கையுடன் நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதனை தொடர்ந்து செய்து கொண்டு இருங்கள்.

நீங்கள் அனைவரும் பண்டிகை கால மனநிலையுடன் தேர்வை எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நேரடியாக மையத்திற்கு சென்று தேர்வு எழுதும்போது எப்படி இருக்குமோ, அதுபோலவே ஆன்லைன் தேர்வும் இருக்கும்.

ஆங்கிலம் அல்லது மாநில மொழி என எந்த மீடியம் ஆக இருப்பினும், நமது மனம் பாடத்துடன் ஒன்றி இருக்கும்போது பெரிய அளவில் வேறுபடாது என்பது பெருமூச்சு விடக்கூடிய ஒன்று.

நாம் ஆன்லைனில் படிக்கிறோமா..?, அல்லது சமூக ஊடகத்தில் படங்களை பார்த்து நேரம் செலவிடுகிறோமா..? என மாணவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதேபோன்று, பெற்றோர் தங்களுடைய கனவுகளை தங்கள் குழந்தைகள் மீது திணிக்கக் கூடாது” என்று பிரதமர் மோடி கூறினார்.

Next Story
Share it