Theme Check

இன்று முதல் எல்லாம் மாறுகிறது… புதிய விதிகள் அமல்!!

இன்று முதல் எல்லாம் மாறுகிறது… புதிய விதிகள் அமல்!!

இன்று முதல் எல்லாம் மாறுகிறது… புதிய விதிகள் அமல்!!
X

இந்த மாதம் முதல் எந்த விதிகள் எல்லாம் அமலுக்கு வருகின்றன, திட்டங்கள், விலை ஏற்ற விவரம் உள்ளிட்டவற்றை பார்க்கலாம்.

கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நீடிக்கிறது. இதற்கு ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலே காரணம். கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருப்பதால் தேர்தல் முடிந்ததும் பெட்ரோல் டீசல் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் இம்மாத இறுதிக்குள் ஆதார் - பான் கார்டுகளை இணைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அரசு திட்டங்களின் கீழ் தொடர்ந்து பயன்பெற KYC தகவல்களை வங்கிக் கணக்கில் கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டுமென எஸ்பிஐ அறிவுறுத்தியுள்ளது.

sbi

இந்தியன் வங்கி ஏடிஎம்களில் மார்ச் 1ஆம் தேதி முதல் 2,000 ரூபாய் நோட்டுகள் வராது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தியன் வங்கிக் கிளைகளில் நேரடியாக சென்று 2,000 ரூபாய் நோட்டு பெறலாம்.

டோல் பிளாசாவில் ஃபாஸ்டேக் (FasTag) வாங்குவதற்கு மார்ச் 1ஆம் தேதி முதல் 100 ரூபாய் செலுத்த வேண்டுமென மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுவரை ஃபாஸ்டேக் இலவசமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

fastag

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.105 உயர்ந்துள்ளது. 19 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டர் இன்று முதல் சென்னையில் ரூ.2040க்கு பதிலாக ரூ.2145.5க்கு கிடைக்கும்.

newstm.in

Next Story
Share it