Theme Check

பரபரப்பு! திமுகவை சேர்ந்தவரை வெட்டிக் கொன்ற அதிமுக பிரமுகர்!!

பரபரப்பு! திமுகவை சேர்ந்தவரை வெட்டிக் கொன்ற அதிமுக பிரமுகர்!!

பரபரப்பு! திமுகவை சேர்ந்தவரை வெட்டிக் கொன்ற அதிமுக பிரமுகர்!!
X

சென்னை தி.மு. நிர்வாகி கொலை சம்பவத்தில், .தி.மு. பிரமுகர் மற்றும் அவரது மகன் உட்பட 5 பேர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

தண்டையார்பேட்டை அப்பாசாமி தெருவைச் சேர்ந்த சவுந்தரராஜன் (59) என்பவர் பாரிமுனை பேருந்து நிலையத்தில் பழக்கடை மற்றும் கரும்பு ஜூஸ் கடை நடத்தி வந்தார். இவருக்கு கலைவாணி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.

.தி.மு.கவில் பணியாற்றிய இவர், 4 மாதங்களுக்கு முன்பு தி.மு..வில் இணைந்தார். இந்நிலையில் பாரிமுனையில் தி.மு. சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருந்தார்.

அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் தண்ணீர் பந்தல் அருகே நின்றிருந்த சவுந்தர்ராஜனை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி சாய்த்தனர். அதில் சவுந்தரராஜன் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

murder 1

தகவலறிந்த எஸ்பிளனேடு போலீஸார் கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்தனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், .தி.மு..வில் இருந்தபோது சவுந்தரராஜன் அப்பகுதியில் தண்ணீர் பந்தல் அமைப்பது வழக்கம்.

தற்போது தி.மு. வில் இணைந்ததையடுத்து, அதே பகுதியில் தண்ணீர் பந்தல் அமைப்பது தொடர்பாக அவருக்கும், .தி.மு.கவை சேர்ந்த கணேஷ் என்பவருக்கும் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

dmk

இக்கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 5 பேரும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தனர். சரணடைந்த .தி.மு. பிரமுகர் கணேசன் அவரது மகன் தினேஷ்குமார் மற்றும் இன்பம், கார்த்தி, குமரேசன் ஆகியோரை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

newstm.in

Next Story
Share it