Theme Check

பரபரப்பு! அடித்து நொறுக்கப்பட்ட பாஜக அலுவலகம்!!

பரபரப்பு! அடித்து நொறுக்கப்பட்ட பாஜக அலுவலகம்!!

பரபரப்பு! அடித்து நொறுக்கப்பட்ட பாஜக அலுவலகம்!!
X

இந்திய ராணுவத்தில் அக்னி வீா் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்க உள்ளதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது.இத்திட்டத்திற்கு அக்னிபத் என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நியமிக்கப்படும் வீரர்கள் அக்னிவீரர்கள் என்றழைக்கப்படுவார்கள்.

இந்த முறையில் தேர்வாகும் வீரர்கள் 4 ஆண்டுகள் பணியில் இருப்பார்கள். அதன் முடிவில் அவர்களுக்கு ரூ.10 லட்சம் (வரிப்பிடித்தம் இல்லாமல்) வழங்கப்படும். அத்துடன் சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்தப் பணிநியமன திட்டம் மூலம் 45,000 முதல் 50,000 வீரர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதிகாரி ரேங்குக்கு கீழ் உள்ள பதவியில் இவர்கள் நியமிக்கப்படுவார்கள். 6 மாத இடைவெளியில் முப்படைகளுக்குமான வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த முறை மூலம் நியமிக்கப்படும் வீரர்கள் 6 மாதம் பயிற்சி பெறுவார்கள். 3.5 ஆண்டுகள் பணி புரிவார்கள்.

agnipath-protest bihar

4 ஆண்டுகள் பணிக்குப் பின்னர் இவர்களில் 25 சதவீதம் பேர் மட்டும் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார்கள். இந்த நிலையில், இந்த திட்டத்தின் மூலம் தங்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதாக கூறி பீகாரில் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த திட்டத்தின் மூலம் 25 சதவீதம் போ் மட்டுமே வழக்கமான பணியில் சேர முடியும் என்று கூறிய இளைஞர்கள், நெடுஞ்சாலையில் டயா்களை கொளுத்தி மறியலில் ஈடுபட்டனா். அப்போது ஏற்பட்ட வன்முறையில் பாஜக அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது.

agnipath-protest bihar

பாட்னா, முசாபர்பூர், பக்கர், ஜெகனாபாத் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளிலும், ரயில் நிலையங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி இளைஞர்கள் கோஷங்களை எழுப்பி வன்முறையில் ஈடுபட்டனர்.

newstm.in

Next Story
Share it