Theme Check

பரபரப்பு! பூட்டியிருந்த வீட்டிற்குள் தரையெல்லாம் ரத்தம்!!

பரபரப்பு! பூட்டியிருந்த வீட்டிற்குள் தரையெல்லாம் ரத்தம்!!

பரபரப்பு! பூட்டியிருந்த வீட்டிற்குள் தரையெல்லாம் ரத்தம்!!
X

திருச்சியில் பூட்டியிருந்த வீட்டுக்குள் ரத்தமாக இருந்த நிலையில், விசாரணையில் காரணம் கள்ளக்காதல் என தெரியவந்துள்ளது.

திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த பேக்கரி கடை மாஸ்டர் முத்துக்குமார் (35). அவரது மனைவி சந்தியா (24) திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்தார். இவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பேக்கரி ஒன்றை நடத்தி வந்தனர்.

பேக்கரி ஒப்பந்தம் முடிந்ததை அடுத்து தாங்கள் குடியிருந்த மேல் மாடி வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான திருப்பத்தூர் மாவட்டம் ராவுத்தன் பட்டிக்கு சென்றுவிட்டனர். இந்நிலையில், அவர்கள் வீட்டு உரிமையாளருக்கு சந்தியாவை யாரோ கொலை செய்துவிட்டதாக தொலைபேசி அழைப்பு வந்தது.

murder

அதிர்ச்சியடைந்த வீட்டு உரிமையாளர், ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பூட்டியிருந்த வீடும், வீட்டிற்குள் சிதறி கிடந்த ரத்தமும், அதனருகில் கிடந்த ரத்தம் தோய்ந்த சட்டையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

முத்துக்குமார்- சந்தியா தம்பதியினர் மொபைல் எண்கள் அணைக்கப்பட்டு இருந்தது. அதையடுத்து, போலீசார் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தினர். அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டில் உள்ளவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, ஒரு இளைஞர் அந்த பகுதிக்கு அடிக்கடி வந்து சென்றதாக தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் நடந்த விசாரணையில், அவர் பேக்கரியை லீஸூக்கு விட்ட, துரை பாலன் (26) என்பது தெரிய வந்தது. வீட்டு உரிமையாளரை செல்போனில் தொடர்புகொண்டு பேசியதும் அவர்தான் என்பது விசாரணையில் தெரியவந்தது.

jambu

அவரிடம் நடத்திய விசாரணையில், சந்தியாவிற்கும் அவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்ததாகவும், அவரிடம் சொல்லாமல் சந்தியா சென்று விட்டதால், அவரைக் காண முடியாமல் தவித்ததாகவும்கூறியிருக்கிறார்.

சந்தியாவை இங்கு வரவழைப்பதற்காகவே கறிக்கடையில் இருந்து ஆட்டு ரத்தத்தை வாங்கி வந்து, பால்கனி வழியாக உள்ளே இறங்கி வீட்டிற்குள் தெளித்தாக தெரிவித்துள்ளார். இந்த வழக்கு குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it