பரபரப்பு! நெல்லையில் நாட்டு வெடிகுண்டு வீச்சு!!
பரபரப்பு! நெல்லையில் நாட்டு வெடிகுண்டு வீச்சு!!

நெல்லையில் நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் நாட்டு வெடிகுண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாளையங்கோட்டை பேருந்து நிலையம் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா கண்டது. பாளையங்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் 30க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கின.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தற்போது பாளையங்கோட்டை பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையம் திறப்பு விழா கண்ட பின்னும் அந்த வளாகத்தில் உள்ள கடைகள் அதிக வாடகை காரணமாக முழுமையாக திறக்கப்படவில்லை.
இதனால் வழக்கமான பரபரப்பு இன்றி மக்கள் நடமாட்டம் மிகக் குறைவாகவே காணப்படுகிறது. 20 பேருந்துகள் வரை நிறுத்தும் அளவில் பேருந்து நிலையமாக இருந்த இந்த பாளையங்கோட்டை பேருந்து நிலையம் தற்போது பேருந்து நிறுத்தமாக சுருங்கியுள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு மேல் பேருந்து நிலைய வளாகத்தில் இயங்கும் ஒரு ஜூஸ் கடைக்கு அருகில் மர்ம நபர் ஒருவர் நாட்டு வெடிகுண்டு வீசி உள்ளார். இரவு நேரம் என்பதாலும், பேருந்துகள் இயக்கமும், மக்கள் நடமாட்டமும் இல்லை.
இதனால் யாருக்கும் எந்த காயம் ஏற்படவில்லை. வெடிகுண்டு வீசிய நபர், அதனை எங்கு தயாரித்தார், வேறு ஏதேனும் கொலை சம்பவத்திற்கும் அந்த நபருக்கும் தொடர்பு உள்ளதா என்று பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in

