பரபரப்பு! ஹிஜாப் வழக்கில் இன்று தீர்ப்பு!!
பரபரப்பு! ஹிஜாப் வழக்கில் இன்று தீர்ப்பு!!

ஹிஜாப் தொடர்பான வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.
கர்நாடகாவில் அரசுப்பள்ளி ஒன்றில் ஹிஜாப் அணிந்து வகுப்பில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதால், பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன.
இதனால் பள்ளிகளுக்கு விடுப்பு அளிக்கும் சூழல் ஏற்பட்டது. ஹிஜாபுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்துத்வா அமைப்பை சேர்ந்த மாணவர்கள் காவி துண்டு அணிந்து வந்தனர்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஹிஜாப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டங்கள் வலுவடைந்த நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது, இந்த வழக்கு முடியும் வரை ஹிஜாப் அல்லது காவித் துண்டு உள்ளிட்ட மத அடையாளங்களோடு மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லக்கூடாது என தலைமை நீதிபதி அமர்வு அறிவுறுத்தியது.

விசாரணை நிறைவடைந்த நிலையில், இன்று காலை ஹிஜாப் வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கையாக வரும் 21ஆம் தேதி வரை பெங்களூருவில் பொது இடங்களில் கூட்டம் கூடவும், கொண்டாட்டங்கள், போராட்டங்களில் ஈடுபடவும் அம்மாவட்ட காவல்துறை தடை விதித்துள்ளது.
newstm.in

