பரபரப்பு! இடி தாக்கி கம்பத்தில் மோதிய விமானம்!!
பரபரப்பு! இடி தாக்கி கம்பத்தில் மோதிய விமானம்!!

இடிதாங்கி கம்பத்தின் மீது ஸ்பைஸ் ஜெட் விமானம் மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஜம்முவுக்கு புறப்படுவதற்காக எஸ்.ஜி. 160 ஸ்பைஸ் ஜெட் விமானம் நேற்று மாலை புறப்பட தயாராக இருந்தது. அப்போது, அதன் நிறுத்துமிடத்தில் இருந்து வாகனம் ஒன்றின் மூலமாக விமானம் இழுத்து வரப்பட்டது.
அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த இடிதாங்கி கம்பத்தின் மீது விமானத்தின் வால் பகுதி மோதி சேதமடைந்தது. இதையடுத்து, பழுது பார்ப்பதற்காக விமானம் கொண்டு செல்லப்பட்டது.

இதன் காரணமாக, அந்த விமானத்தில் ஏற வேண்டிய பயணிகள், மாற்று விமானம் மூலமாக ஜம்முவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
newstm.in
Next Story

