Theme Check

பரபரப்பு! கள்ளக்காதலால் அரிசி வியாபாரி வெட்டிக் கொலை!!

பரபரப்பு! கள்ளக்காதலால் அரிசி வியாபாரி வெட்டிக் கொலை!!

பரபரப்பு! கள்ளக்காதலால் அரிசி வியாபாரி வெட்டிக் கொலை!!
X

கோவை நாச்சிபாளையத்தில் கள்ளக்காததால் அரிசி வியாபாரி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரிசி வியாபாரி ராமநாதன் வெட்டிக் கொல்லப்பட்டதை அடுத்து அவர் உடல் குடோனில் கிடந்தது. அதனை போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ராமநாதனுக்கு ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தொழில் போட்டியில் அவர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கினர்.

murder

ராமநாதனை யாரெல்லாம் சந்திக்க வந்தனர் என்பது பற்றி அந்த பகுதியினரிடம் விசாரித்தனர். அப்போது ராமநாதனின் பெரியப்பா மகனும், தம்பி முறையுமான முருகன் (35) என்பவர் வந்து சென்றது தெரியவந்தது.

இதையடுத்து நடைபெற்ற விசாரணையில் முருகன் ராமநாதனை வெட்டிக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். முருகனின் மனைவியுடன் ராமநாதனுக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது.

இதனை அறிந்த முருகனும், உறவினர்களும் ராமநாதனை கண்டித்துள்ளனர். ஆனால் ராமநாதன், தம்பி மனைவியுடனான தொடர்பை கைவிடாமல் இருந்துள்ளார்.

arrest

இதனால் ஆத்திரமடைந்த முருகன், மதுரையில் இருந்து கோவைக்கு வந்து திட்டமிட்டு ராமநாதனை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. இந்த தகவல்களை முருகன், போலீசாரிடம் வாக்குமூலமாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் முருகனை கைது செய்தனர்.

newstm.in

Next Story
Share it