Theme Check

பரபரப்பு! நள்ளிரவு தேசிய நெடுஞ்சாலையில் கொழுந்துவிட்டு எரிந்த கார்!!

பரபரப்பு! நள்ளிரவு தேசிய நெடுஞ்சாலையில் கொழுந்துவிட்டு எரிந்த கார்!!

பரபரப்பு! நள்ளிரவு தேசிய நெடுஞ்சாலையில் கொழுந்துவிட்டு எரிந்த கார்!!
X

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆம்பூர் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த சமியுல்லா என்பவர் தனது நண்பர் நவாஸ் உடன் சென்னையில் இருந்து ஆம்பூர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சின்ன கொமேஸ்வரம் என்ற இடத்தில் கார் பழுதாகி நின்றதது.

இதனையடுத்து அங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் காரை தள்ளிக் கொண்டு வந்தனர். அப்போது கார் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. அதிர்ச்சி அடைந்த இருவரும் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

car fire

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் கார் முழுவதும் தீ பரவி எரிந்து நாசமானது.

இதுகுறித்து ஆம்பூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் தேசிய நெடுஞ்சாலையில் கார் தீப்பற்றி எரிந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

newstm.in

Next Story
Share it