Theme Check

பரபரப்பு! நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்!!

பரபரப்பு! நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்!!

பரபரப்பு! நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்!!
X

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

லால்குடி பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவர், முசிறியில் உள்ள நண்பரை சந்தித்து விட்டு மீண்டும் குளித்தலை வழியாக திருச்சிக்கு இண்டிகா காரில் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது குளித்தலை நாப்பாளையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென காரின் இன்ஜின் பகுதியிலிருந்து புகையுடன் நெருப்பு பற்றி எரிய ஆரம்பித்தது.

krr car

உடனடியாக சாலை ஓரமாக காரை நிறுத்திவிட்டு பாலமுருகன் காரை விட்டு இறங்கி விட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முசிறி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இருந்தாலும் கார் முற்றிலும் எரிந்துவிட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it