பரபரப்பு.. ரஷ்ய அதிபரிடம் இருந்து தலைவர் பதவி பறிப்பு !
பரபரப்பு.. ரஷ்ய அதிபரிடம் இருந்து தலைவர் பதவி பறிப்பு !

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலில் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக சர்வதேச ஜூடோ தற்காப்புக்கலை அமைப்பின் கவுரவ தலைவர் பதவி, ரஷ்ய அதிபரிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தனது இளமை காலத்தில் அந்நாட்டின் உளவு அமைப்பான கே.ஜி.பி.யில் முக்கிய பொறுப்பை வகித்தவர். அதன் பின்னரே படிப்படியாக உயர்ந்து தற்போது அதிபராகியுள்ளார். தற்காப்பு கலையிலும் வல்லவரான அவர் சர்வதேச ஜூடோ அமைப்பின் கவுரவ தலைவராக இருந்து வந்தார். இதற்கிடையே, உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
தற்போதும் ஐநா உள்பட பல்வேறு நாடுகள் ரஷ்யாவின் செயல்பாட்டை கண்டித்து வருகின்றன. இருப்பினும் விடாப்பிடியாக உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறது. ரஷ்யா மீது தொழில்நுட்ப ரீதியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இவ்வாறு சர்வதேச அளவில் ரஷ்யாவுக்கு சிறிது சிறிதாக நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சர்வதேச ஜூடோ அமைப்பின் கவுரவ தலைவர் பொறுப்பில் இருந்து ரஷ்ய அதிபர் புதின் நீக்கப்படுவதாக அதன் நிர்வாகக்குழு இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு ஜூடோ கலையில் உச்சபட்ச பட்டத்தை புதின் பெற்றார். விளையாட்டு உலகில் இந்தப் பட்டம் குறிப்பிடத்தகுந்த ஒன்றாக மதிக்கப்படுகிறது. அதே ஆண்டில் ஜூடோவின் தூதராக புதின் பாராட்டப்பெற்றார்.
newstm.in