சைக்கிளிங் சென்றபோது அதிபர் பைடன் கீழே விழுந்ததால் பரபரப்பு.. வீடியோ !!

சைக்கிளிங் சென்றபோது அதிபர் பைடன் கீழே விழுந்ததால் பரபரப்பு.. வீடியோ !!

சைக்கிளிங் சென்றபோது அதிபர் பைடன் கீழே விழுந்ததால் பரபரப்பு.. வீடியோ !!
X

அமெரிக்க அதிபர் பைடன் சைக்கிளிங் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெலாவர் மாகாணத்தில் உள்ள தனது கடற்கரை இல்லம் அருகே சைக்கிளிங் சென்றார். தனது மனைவி உள்ளிட்டோருடன் ஜோ பைடன் சென்றுகொண்டிருந்த போது அங்கு நின்று கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளை பார்த்ததும் கையசைத்தார்.

biden

பின்னர் பேசுவதற்காக அவர்களை நோக்கி சென்ற பைடன் அப்போது சைக்கிளை நிறுத்தினார். ஆனால் கால் பெடலில் சிக்கியதால் நிலைதடுமாறி ஜோ பைடன் கீழே விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும் உடனே எழுந்த ஜோ பைடன், தான் நலமாக இருப்பதாக தெரிவித்தார்.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிபர் ஜோ பைடனுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. எந்தவித மருத்துவ சிகிச்சையும் தேவையில்லை என தெரிவித்துள்ளது.

" style="border: 0px; overflow: hidden"" title="Joe Biden falls off bike while cycling in Delaware" width="811">

newstm.in

Tags:
Next Story
Share it