Theme Check

செஞ்சியில் பரபரப்பு..!! வாழைப்பழத்தை சாப்பிட்ட 3 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி!!

செஞ்சியில் பரபரப்பு..!! வாழைப்பழத்தை சாப்பிட்ட 3 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி!!

செஞ்சியில் பரபரப்பு..!! வாழைப்பழத்தை சாப்பிட்ட 3 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி!!
X

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள கல்லேரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாலாஜி (12), மூர்த்தி (7) மற்றும் விக்னேஷ். இவர்கள் மூவரும் மேல்சித்தாமூரில் உள்ள அரசு பள்ளியில் பாலாஜி 6-ம் வகுப்பும், செல்வமூர்த்தி 3-ம் வகுப்பும், விக்னேஷ் 5-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் மூவரும் ஊரை ஒட்டியுள்ள தொண்டி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது அங்கு கிடந்த வாழைப்பழத்தை எடுத்து சாப்பிட்டுள்ளனர். வாழைப்பழத்தை சாப்பிட்ட சிறிது நேரத்தில் 3 பேரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.

1

இதனைக்கண்ட அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் சிறுவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அதையடுத்து உடனடியாக 3 சிறுவர்களையும் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் பரிசோதனையில், 3 சிறுவர்களும் விஷம் கலந்த வாழைப்பழம் சாப்பிட்டு இருந்தது தெரியவந்தது.

villupuram

இதுகுறித்து தகவல் அறிந்து செஞ்சி போலீசார், அந்த கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த வாழைப்பழத்தின் உள்ளே வயலுக்கு தெளிக்கப்படும் மருந்தை வைத்திருந்தது தெரியவந்தது. இது கொக்குகளைப் பிடிக்க இப்படி வாழைப் பழத்தில் மருந்து வைத்திருப்பதும் தெரியவந்தது. வாழைப்பழத்தில் விஷம் கலந்து வைத்த மர்மநபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
Share it