எதிர்பார்ப்பு.. வெளியானது பா.ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ ஃபர்ஸ்ட் லுக் !!
எதிர்பார்ப்பு.. வெளியானது பா.ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ ஃபர்ஸ்ட் லுக் !!

பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள நட்சத்திரம் நகர்கிறது என்ற திரைப்படத்தின் முதல் போஸ்டர் வெளியானது.
நீலம் புரொடக்சன்ஸ் சார்பாக பா.ரஞ்சித் தயாரித்து இயக்கியுள்ள படம் நட்சத்திரம் நகர்கிறது. முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன், 'டான்சிங் ரோஸ்' ஷபீர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
யாழி பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இந்தப் படத்தை தயாரித்துள்ளன. கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு பட இசையமைப்பாளர் தென்மா இசையமைத்துள்ளார். முழுக்க முழுக்க காதல் படமாக உருவாகுகிறது.
உமா தேவி மற்றும் அறிவு இணைந்து இந்தப் படத்துக்கு பாடல்கள் எழுத, சாண்டி நடன இயக்குநராக பணிபுரிந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை பா.ரஞ்சித் இயக்குகிறார். ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகும் இந்த புதிய திரைப்படம் பிரமாண்டமாக பீரியட் தயாராகவுள்ளது. இடையில் பாலிவுட்டில் 'பிர்சா முண்டா' படத்தையும் இயக்க இருக்கிறார்.
newstm.in