Theme Check

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர் தேர்தலில் வெற்றி.. குழப்பத்தில் நிர்வாகிகள் !!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர் தேர்தலில் வெற்றி.. குழப்பத்தில் நிர்வாகிகள் !!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர் தேர்தலில் வெற்றி.. குழப்பத்தில் நிர்வாகிகள் !!
X

சென்னை காரப்பாக்கம் இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் லியோ என்.சுந்தரம். அதிமுக முன்னாள் கவுன்சிலரான இவர், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் தேர்தலில் போட்டியிட விரும்பினார். சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட 198ஆவது வார்டில் போட்டியிட அதிமுக.வில் விருப்ப மனு அளித்தார்.

ஆனால் அதிமுக தலைமை அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. மாறாக அந்த வார்டில் அதிமுக வேட்பாளராக எம்.கே.பழனிவேல் நிறுத்தப்பட்டார். எனினும் அதிருப்தி அடைந்த லியோ சுந்தரம், தேர்தலில் போட்டியிடுவதில் உறுதியாக இருந்தார். இதனால் அதிமுக வேட்பாளரை எதிர்த்து சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார்.

d

லியோ சுந்தரம், அதிமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், நடந்துமுடிந்த தேர்தலில் லியோ என்.சுந்தரம் 5 ஆயிரத்து 524 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார். அதிமுக வேட்பாளர் எம்.கே.பழனிவேல் 1,870 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

ஆனால் தற்போது அவர் வெற்றி மகுடம் சூடி மீண்டும் கவுன்சிலராகி உள்ளார். இதனால் லியோ என்.சுந்தரம் மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்படுவாரா அல்லது கட்சி மாறுவாரா என்ற பரபரப்பு அதிமுகவில் எழுந்துள்ளது.

newstm.in

Next Story
Share it