Theme Check

இலவச ரேஷன் திட்டம் நீட்டிப்பு.. அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்..!

இலவச ரேஷன் திட்டம் நீட்டிப்பு.. அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்..!

இலவச ரேஷன் திட்டம் நீட்டிப்பு.. அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்..!
X

உத்தரப் பிரதேச முதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்ட யோகி ஆதித்யநாத்தின் தலைமையில் இன்று நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், இலவச ரேஷன் திட்டம் மேலும் மூன்று மாதங்கள் நீட்டித்து ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்ற நிலையில், அந்த மாநில முதல்வராக இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் நேற்று பதவியேற்றார். அவருடன், இரண்டு துணை முதல்வர்கள் உட்பட 52 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.
Yogi First Cabinet Meet CM Announces Extension Of Free Ration Scheme in UP  By 3 Months
இந்த நிலையில், உத்தரப் பிரதேச முதல்வராக பதவியேற்றுக் கொண்ட யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் லக்னோவில் உள்ள லோக் பவனில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், “உத்தரப் பிரதேசத்தில் நடைமுறையில் இருந்த இலவச ரேஷன் திட்டம் மார்ச் மாதத்துடன் நிறைவடையவிருந்த நிலையில், அது மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்கப்படுகிறது. இதன் மூலம், 15 கோடி மக்கள் பயனடைவார்கள்” என்று தெரிவித்தார்.

Next Story
Share it