போதைப்பொருள் கொடுத்து மாஜி மனைவி கற்பழிப்பு.. எய்ட்ஸ் நோயாளி மீது போலீசில் புகார்..!
போதைப்பொருள் கொடுத்து மாஜி மனைவி கற்பழிப்பு.. எய்ட்ஸ் நோயாளி மீது போலீசில் புகார்..!

பெங்களூருவைச் சேர்ந்த 28 வயது இளம் பெண் ஒருவருக்கும், வாடகை கார் டிரைவர் ஒருவருக்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில், அந்த டிரைவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். ஆனால், இதுகுறித்து அவர் இளம்பெண்ணிடம் கூறவில்லை.
ஆனாலும், டிரைவருக்கு எய்ட்ஸ் இருப்பதை இளம்பெண் கண்டுபிடித்தார். இதுகுறித்து கேட்டபோது, தனது முதல் மனைவியிடம் இருந்து தனக்கும் எய்ட்ஸ் வந்ததாக கூறியுள்ளார். ஆனாலும், குடும்ப சூழ்நிலையால் அந்த இளம் பெண், டிரைவருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் அந்த டிரைவர், பல பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி பணம் மோசடி செய்தது வந்தது பற்றி இளம்பெண்ணுக்கு தெரியவந்தது.
இதனால் அந்த இளம் பெண் தனது கணவரை பிரிந்து தாய் வீட்டிற்கு சென்று விட்டார். மேலும், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு 2 பேரும் விவாகரத்து பெற்று இருந்தனர்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த இளம்பெண்ணை சந்தித்து பேசிய டிரைவர், இனி மேல் எந்த தவறும் செய்ய மாட்டேன் என்றும், தன்னுடன் வாழ வரும்படியும் கூறியுள்ளார்.
அதற்கு அந்த இளம்பெண் மறுத்துள்ளார். இதனால், குளிர்பானத்தில் போதை பொருட்களை கலந்து கொடுத்து இளம்பெண்ணை, டிரைவர் கற்பழித்ததாக தெரிகிறது.
இதுகுறித்து அறிந்த இளம் பெண், பனசங்கரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், தனக்கும் எய்ட்ஸ் உள்ளதா என்று அறிய தன்னை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளார்.

