முகக்கவசம் அணியாவிடில் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் !!
முகக்கவசம் அணியாவிடில் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் !!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது ஆயிரத்து 500-ஐ தினசரி பாதிப்பு தாண்டியுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தை தொடர்ந்து கோவையிலும் அதிகரித்து வருவது மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் நேற்று 64 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து கோவையில் பொது இடங்களில் முககவசம் அணியாமல் வரும் நபர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கோவை ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கோவை மாவட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க சுகாதார துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அரசு, தனியார் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும். பொதுஇடங்களில் முக கவசம் அணியாமல் வரும் நபர்களுக்கு ரூ.500 அபராதம் விதித்து வசூலிக்க வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in

