Theme Check

கள்ளக்காதல்… திமுக பிரமுகர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை!!

கள்ளக்காதல்… திமுக பிரமுகர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை!!

கள்ளக்காதல்… திமுக பிரமுகர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை!!
X

சென்னை ராயபுரத்தில் திமுக பிரமுகர் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணலி பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் சக்கரபாணி (65) வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டு ராயபுரம் பகுதியில் வீடு எடுத்து அந்தப் பெண்மணியுடன் தங்கி வந்தார்.

இந்நிலையில், கடந்த 10ஆம் தேதி முதல் சக்கரபாணி காணவில்லை என அவரது குடும்பத்தார் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் ராயபுரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

dmk sakkarabani

இந்நிலையில் ராயபுரம் பகுதியில் ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வீட்டின் உள்ளே சென்று சோதனையிட்டனர்.

அப்போது அங்கு சாக்கு மூட்டையில் கை, கால்கள் மட்டும் இருந்ததை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். விசாரணையில் தமீம் பானு என்பவரது வீட்டில் சக்கரபாணி இருந்து வந்தது தெரியவந்தது.

அப்போது அப்பெண்ணின் சகோதரர் வாஷிங் பாஷாவுக்கும், சக்கரபாணிக்கும் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றவே அருகிலிருந்த அருவாமனையை கொண்டு சக்கரபாணியை வெட்டியுள்ளார்.

dmk sakkarabani

இதனையடுத்து உடலை துண்டு துண்டாக வெட்டி, தலையை அடையாறு பாலத்திலும், உடல் பகுதிகளை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலும், கை கால்களை மட்டும் வீட்டிலே வைத்து தலைமறைவாகிவிட்டனர்.

கைது செய்யப்பட்ட பாஷா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தலையை அடையாறு திரு.வி.க பாலத்தில் தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர். மற்றொரு குழுவினர் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it