Theme Check

கள்ளக்காதல்.. தந்தையை எரித்துக்கொன்ற மகள்.. உதவிய தாய் !!

கள்ளக்காதல்.. தந்தையை எரித்துக்கொன்ற மகள்.. உதவிய தாய் !!

கள்ளக்காதல்.. தந்தையை எரித்துக்கொன்ற மகள்.. உதவிய தாய் !!
X

கள்ளக்காதல் பிரச்னையில் தந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்துகொலை செய்ததாக அவரது மகள், தாய், கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்

ராமநாதபுரம் அருகே ஆர்.காவனுார் ஆசாரிமடம் பகுதியில் ரவி (56) - பாக்கியம் (54) தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களின் ஒரே மகள் பவித்ராவுக்கு (26), திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். பவித்ரா கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார். லாரி ஓட்டுநரான ரவி குடும்பத்தை கவனித்து வந்தார். பவித்ராவுக்கு அதேபகுதியில் வேறொரு நபருடன் கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு தந்தை ரவி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.

kallakadhal

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன் குடும்ப பிரச்சனை காரணமாக மகளுடன் வீட்டை விட்டு பாக்கியம் அதே பகுதியை சேர்ந்த கோபால் வீட்டில் தங்கி இருந்தனர். இதனால் வீட்டில் ரவி மட்டும் தனியாக இருந்துள்ளார். ஆனால், கடந்த 8ஆம் தேதி ரவி வீட்டில் தனியாக துாங்கிக்கொண்டிருந்தப்போது, திடீரென உடலில் தீப்பற்றி எரிந்து பலத்த காயம் அடைந்தார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 11ஆம் தேதி ரவி உயிரிழந்தார்.

இதனையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அக்கம்பக்கத்தினர் கூறிய தகவலை அறிந்த போலீசாருக்கு, மகள் பவித்ரா மீது சந்தேகம் எழுந்தது. இதில், ரவி போதையில் அடிக்கடி வீட்டில் பிரச்சனை செய்துள்ளார். மேலும் பவித்ராவின் கள்ளக்காதலை கண்டித்துள்ளார். இதனையடுத்து ரவி வீட்டில் போதையில் துாங்கும்போது படுக்கையில் பெட்ரோல் ஊற்றி பவித்ரா, பாக்கியம் ஆகியோர் தீ வைத்தது விசாரணையில் தெரியவந்தது.

kallakadhal

இதற்கு பவித்ராவின் கள்ளக்காதலன் முருகானந்தம் (42), உதவியுள்ளார். இந்த தகவல் தெரியவந்ததும் இறந்த ரவியின் உறவினர்கள் பவித்ராவை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். மனைவி பாக்கியம், முருகானந்த்தை கைது செய்துள்ளனர். கள்ளக்காதல் விவகாரத்தில் தந்தையையே மகள் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it