Theme Check

கோவில் கும்பாபிஷேகத்திற்கு ஹெலிகாப்டரில் வந்த குடும்பம்!!

கோவில் கும்பாபிஷேகத்திற்கு ஹெலிகாப்டரில் வந்த குடும்பம்!!

கோவில் கும்பாபிஷேகத்திற்கு ஹெலிகாப்டரில் வந்த குடும்பம்!!
X

கோவில்பட்டி அருகே கோவில் கும்பாபிஷேகத்தை காண இரும்பு வியாபாரியின் குடும்பத்தினர் ஹெலிகாப்டரில் வந்தனர்.

தெற்கு தீத்தாம்பட்டி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன், ஸ்ரீ கன்னி விநாயகர், ஸ்ரீ சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக அதே கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவர் குடும்பத்துடன் ஹெலிகாப்டரில் வந்தார். நடராஜனின் தந்தை பாலசுப்பிரமணியன் பல ஆண்டுகளாக குடும்பத்துடன் கும்மிடிப்பூண்டியில் வசித்து வருகிறார்.

Helicopter-3

பாலசுப்ரமணியன் மற்றும் அவரது மூத்த மகன் நடராஜன் ஆகியோர் இரும்பு கடை வைத்துள்ளனர். மற்றொரு மகன் ராஜதுரை ஜவுளிக்கடை வருகிறார். நடராஜனுக்கு சிறுவயது முதலே ஹெலிகாப்டர், விமானத்தில் செல்ல வேண்டும் என்று ஆசை.

அதே போன்று நடராஜன் மகன் மோகித்திற்கும் ஹெலிகாப்டரில் செல்ல ஆசை. இதையெடுத்து மகன் மற்றும் பேரனின் ஆசையை நிறைவேற்ற கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு ஹெலிகாப்டரில் செல்ல ஏற்பாடு செய்தார்.

Helicopter-3

பெங்களூரில் உள்ள தனியார் ஹெலிகாப்டர் நிறுவனம் மூலமாக நடராஜன், அவரது மனைவி சுந்தரவள்ளி, அவரது மகன் மோகித், சகோதரர் ராஜதுரை, உறவினர் அசோக் ஆகிய 5 பேரும் ஹெலிகாப்டர் மூலமாக தெற்கு தீத்தாம்பட்டிக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

newstm.in

Next Story
Share it