Theme Check

அதிர்ச்சியில் குடும்பத் தலைவிகள் !!ஆவின் நெய், தயிர் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வு

அதிர்ச்சியில் குடும்பத் தலைவிகள் !!ஆவின் நெய், தயிர் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வு

அதிர்ச்சியில் குடும்பத் தலைவிகள் !!ஆவின் நெய், தயிர் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வு
X

தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால் சார்ந்த உணவு பொருட்களான, தயிர், வெண்ணெய், நெய், பால் பவுடர், பால்கோவா, மைசூர்பாக், ஐஸ்கிரீம் போன்ற பல பொருட்களை குறைந்த விலையில் தயாரித்து விற்று வருகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.கூடுதலாக பிரீமியம் மில்க் கேக், யோகர்ட் பானம், பாயாசம் மிக்ஸ், பால் புரத நூடுல்ஸ் மற்றும் டெய்ரி ஒய்ட்னர் ஆகிய ஐந்து புதிய பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்நிலையில், நெய், தயிர் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, நெய், தயிர், பாதாம் பவுடர், குல்பி உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, அரை லிட்டர் தயிர் 27 ரூபாயிலிருந்து 30 ரூபாயகவும், ஒரு லிட்டர் ஆவின் நெய் 515 ரூபாயிலிருந்து 535 ரூபாயாகவும், குல்பி 25 ரூபாயில் இருந்து 30 ரூபாயாகவும், 200 கிராம் பாதாம் பவுடர் 80 ரூபாயில் இருந்து 100 ரூபாயாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு அமுலுக்கு வந்தது என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story
Share it