Theme Check

போலீசாருக்கு மரண பயத்தை காட்டிய குடும்பம்..!! தாய் மற்றும் மகள் தற்கொலை செய்து கொள்ள என்ன செஞ்சாங்க பாருங்க..!!

போலீசாருக்கு மரண பயத்தை காட்டிய குடும்பம்..!! தாய் மற்றும் மகள் தற்கொலை செய்து கொள்ள என்ன செஞ்சாங்க பாருங்க..!!

போலீசாருக்கு மரண பயத்தை காட்டிய குடும்பம்..!! தாய் மற்றும் மகள் தற்கொலை செய்து கொள்ள என்ன செஞ்சாங்க பாருங்க..!!
X

தலைநகர் டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 207-வது வீட்டில் வசித்து வருபவர் மஞ்சு (50). இவருக்கு அன்ஷிகா, அன்கு என்று இரு மகள்கள் உள்ளனர். மஞ்சுவின் கணவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனாவால் உயிரிழந்தார். அதில் இருந்தே மஞ்சு மற்றும் இரு மகள்களும் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், மஞ்சு வீடு நேற்று முன் தினம் மாலை நீண்டநேரமாக உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த நிலையில், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை தட்டியுள்ளனர். ஆனால், கதவை யாரும் திறக்காததால் சந்தேகமடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து, குடியிருப்பு பகுதிக்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு வீட்டின் ஒரு அறையில் மஞ்சு மற்றும் அவரின் மகள்களான அன்ஷிகா, அன்கு என 3 பேரும் இறந்து கிடந்துள்ளனர். இதை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் 3 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Delhi-vasanth-vikhar-suicide

வீட்டில் இருந்த எரிவாயு சிலிண்டர் திறக்கப்பட்டு அதில் இருந்து எரிவாயு வெளியாகி வீடு முழுவதும் வீசியுள்ளது. வீட்டின் கதவு ஜன்னல்கள் முழுவதும் பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்டிருந்தது. மேலும், வீட்டில் இருந்த தற்கொலை கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில் வீட்டிற்குள் நுழையும் யாரும் தீக்குச்சியை பற்றவைக்க வேண்டாம். அவ்வாறு செய்தால் வீடு முழுவதும் தீயில் கருகி விடும் என எழுதிவைக்கப்பட்டுள்ளது.

Delhi-vasanth-vikhar-suicide

அதிக அளவிலான ஆபத்தை ஏற்படுத்திய வாயு கார்பன் மோனாக்சைடு வீடு முழுவதும் பரவி உள்ளது. அது தீப்பற்றக்கூடும். தயவு செய்து வீட்டின் கதவு, ஜன்னல்கள், காற்றுப்போக்கியை திறந்துவிடுங்கள். தீக்குச்சி, மெழுகுவர்த்தி என எதையும் பற்றவைக்க வேண்டாம்.

பிளாஸ்டிக்கால் அமைக்கப்பட்டுள்ள திரையை கவனமாக நீக்குங்கள் எனென்றால் அறை முழுவதும் ஆபத்தை விழைவிக்கக்கூடிய வாயு உள்ளது. அதை சுவாசிக்காதீர்கள் என எழுதப்பட்டுள்ளது.

Delhi-vasanth-vikhar-suicide

இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார் கவனமாக செயல்பட்டு வீடு முழுவதும் பிளாஸ்டிக் கவரால் அடைக்கப்பட்டிருந்த கதவு, ஜன்னல்களை திறந்து வாயு வெளியேற செய்தனர்.

கதவு, ஜன்னலை பிளாஸ்டிக் கவரால் காற்று புகாத அளவுக்கு மூடிவிட்டு வீட்டில் இருந்த இருந்த கியாஸ் சிலிண்டரை திறந்துவைத்துவிட்டு வீட்டிற்குள்ளேயே விறகு அடுப்பில் தீ வைத்து புகையை உண்டாகியுள்ளனர். அந்த புகை சமையல் எரிவாயு சிலிண்டர் வாயுவுடன் சேர்ந்து கார்பன் மோனாக்சைடு என்ற விஷவாயுவாக மாறியுள்ளது. அந்த விஷவாயு வெளியே செல்லமுடியாமல் வீட்டிற்குள்ளேயே இருந்துள்ளது. அந்த விஷவாயுவை சுவாசித்த மஞ்சு மற்றும் அவரின் மகள்களான அன்ஷிகா, அன்கு மூச்சுதிணறி உயிரிழந்துள்ளனர்.

Tags:
Next Story
Share it