பிரபல 10 ரூபாய் டாக்டர் மரணம் – பொதுமக்கள் சோகம்!!
பிரபல 10 ரூபாய் டாக்டர் மரணம் – பொதுமக்கள் சோகம்!!

சிதம்பரத்தைச் சேர்ந்த மருத்துவர் அசோகன் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிதம்பரம் நகரத்தில் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தார். இவரை பொதுமக்கள் 10 ரூபா டாக்டர் என்றே அழைப்பார்கள்.
கடந்த ஆண்டு கொரோனா நேரத்தில் பல தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்ட நிலையில் இவர் மருத்துவமனையை மூடாமல் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தார்.
இவரின் சேவையை மதிக்கும் வகையில் பல்வேறு அமைப்புகள் இவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளன. இவரது மருத்துவமனைக்கு சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியிலுள்ள ஏழை மக்கள் தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்வார்கள்.

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவம் பார்த்து வந்தாலும் இதுவரை மருத்துவமனைக்கு சொந்த கட்டடம் இல்லை. வாடகை இடத்திலேயே இவர் மருத்துவம் பார்த்து வந்தார். மருத்துவமனைக்கு திடீர் உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தால் அவர்கள் பணம் இல்லை என்று கூறினாலும் கட்டாயபடுத்தமாட்டார்.
இந்நிலையில் மருத்துவர் அசோகன் நேற்று மாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த செய்தி சிதம்பரம் பகுதியில் உள்ள மக்கள் மற்றும் மருத்துவமனைக்கு வந்து செல்பவர்கள் என அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

