இறந்த தோழியின் பிறந்த நாளில் பிரபல நடிகை கண்ணீர் பதிவு!!
இறந்த தோழியின் பிறந்த நாளில் பிரபல நடிகை கண்ணீர் பதிவு!!

கார் விபத்தில் உயிரிழந்த தனது தோழியின் பிறந்த நாளில் நடிகை யாஷிகா ஆனந்த் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
நடிகை யாஷிகா தனது தோழி பாவனி மற்றும் நண்பர்களுடன் காரில் சென்றபோது விபத்து ஏற்பட்டது. அதில் பாவனி உயிரிழந்தார். யாஷிகா படுகாயம் அடைந்தார். அவர் மெல்ல மெல்ல குணமடைந்து தற்போது தான் பழைய நிலைக்கு வந்திருக்கிறார்.
இந்நிலையில் பாவனியின் பிறந்தநாளில் அவரை நினைத்து யாஷிகா வேதனையுடன் இன்ஸ்டாகிராமல் பதிவிட்டுள்ளார். அதில், உன் பிறந்தநாளில் நீ இல்லை என்பதை ஏற்க முடியவில்லை, என் வாழ்க்கையில் ஒரு தூணாக இருந்தாய் நீ எனகுறிப்பிட்டுள்ளார்.

என்னை சுற்றியுள்ளவர்கள் என்னிடம் போலியாக நடந்து கொண்டதை, பல விதங்களில் ஏமாற்றியதை பார்த்திருக்கிறேன். நீ தான் பல ஆண்டுகளாக என்னிடம் உண்மையாக இருந்தது. நீ வானில் நட்சத்தரிமாக இருந்து என்னை பார்ப்பதுடன், வழிநடத்தவும் செய்கிறாய்.
நீ இல்லை என்கிற உண்மை சில சமயங்களில் என்னை நொறுக்கிவிடுகிறது. நீ என்னுடன் இருந்த கடைசி வாரத்தில் எடுத்த புகைப்படங்கள் இது என யாஷிகா வேதனைப்பட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் யாஷிகாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
newstm.in

