வங்கி கொள்ளையில் பிரபல ஹாலிவுட் பட இயக்குநர் கைது !!

வங்கி கொள்ளையில் பிரபல ஹாலிவுட் பட இயக்குநர் கைது !!

வங்கி கொள்ளையில் பிரபல ஹாலிவுட் பட இயக்குநர் கைது !!
X

ஹாலிவுட்டில் பெரும் வெற்றிபெற்ற படங்களில் ஒன்று பிளாக் பான்தர். அப்படத்துக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் அப்படத்தின் இயக்குநரை கொள்ளை புகார் போலீசார் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிளாக் பான்தர் படத்தின் இயக்குநர் ரியான் கூக்லர் தலையில் தொப்பி, கண்ணாடி, முகக் கவசம் அணிந்துகொண்டு, அட்லாண்டா பகுதியில் உள்ள ஃபேங்க் ஆஃப் அமெரிக்கா என்ற வங்கிக்கு சென்றுள்ளார்.

Black Panther director

பணம் எடுப்பதற்கான ரசீதுடன் காகிதம் ஒன்றையும் வங்கி காசாளரிடம் அவர் வழங்கியுள்ளார். அந்த ஆவணத்தில் எனது கணக்கில் இருந்து 12,000 டாலர் பணம் எடுக்க வேண்டும். தயவுசெய்து பணத்தை வேறு இடத்தில் வைத்து எண்ணுங்கள். எனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தாதீர்கள், என எழுதப்பட்டிருந்தது.

இதனை பார்த்து சந்தேகம் அடைந்த காசாளர், ரசீது வழங்கியவரை பார்த்துள்ளார். முகக் கவசம், கண்ணாடி, தொப்பி என தன் தோற்றத்தை முழுமையாக ரியான் மறைத்திருந்ததாலும், அவரது வித்தியாசமான அனுகுமுறையாலும் அவரை திருடன் என நினைத்த காசாளர், உடனடியாக தனது மேலதிகாரிக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.
Black Panther director
இதனையடுத்து அவர் பாதுகாப்பு கருதி காவல்துறைக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். தகவல் அறிந்து வங்கிக்கு விரைந்து வந்த காவல்துறையினர் ரியான் கூக்லரின் கைகளில் விலங்கு மாட்டி கைது செய்துள்ளனர். பின்னர் முகக்கவசம், தொப்பியை அகற்றி பார்த்தப்போது தான் தெரியந்தது அவர் பிரபல இயக்குநர் ரியான் என்பது. பிறகு காவல்துறையினர் ரியானை விடுவித்துள்ளனர்.

வங்கியில் இருந்து பெரும் தொகை பெறுவதால், பாதுகாப்பு காரணங்களுக்காக மறைவான இடத்தில் வைத்து எண்ணும்படி அவர் சொல்லியிருக்கிறார். அதுவே சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


newstm.in

Tags:
Next Story
Share it