Theme Check

உயிருக்கு ஆபத்து இருப்பதாக பிரபல நடிகர் போலீஸில் புகார்!!

உயிருக்கு ஆபத்து இருப்பதாக பிரபல நடிகர் போலீஸில் புகார்!!

உயிருக்கு ஆபத்து இருப்பதாக பிரபல நடிகர் போலீஸில் புகார்!!
X

சாலையில் சென்ற தன்மீது தாக்குதல் நடந்த முயன்றதாகவும் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் பிரபல நடிகர் மீசை ராஜேந்திரன் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

நெல்லை மாவட்டம் முக்கூடல் பகுதியைச் சேர்ந்த மீசை ராஜேந்திரன், தற்போது சென்னை சூளைமேட்டில் வசித்து வருகிறார் . முக்கூடல் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய இவர் குடும்பத்துடன் சென்றிருந்தார்.

இந்த கோயில் அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அத்துடன் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோயில் பெயரில் சிலர் பணம் வசூலித்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி ராஜேந்திரன் நீதிமன்றம் சென்று தடைபெற்றுள்ளார்.

இந்நிலையில் ராஜேந்திரன் மாரியம்மன் கோயிலுக்கு சென்ற போது சிலர் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டிருந்தனர். அவர்களிடம் நீதிமன்ற தடை இருக்கும் போது எப்படி பணிகள் செய்யப்படுகின்றது என்று வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

meesai rajendran1

இந்த நிலையில் தன்னை அவர்கள் தாக்க முயற்சித்ததாகவும், நீதிமன்ற தீர்ப்பை மீறி செயல்படுவதாகவும் கூறி முக்கூடல் காவல் நிலையத்தில் ராஜேந்திரன் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

சொக்கலான்புரம் மெயின் ரோடு அருகே குடும்பத்தினருடன் காரில் சென்ற போது தனது வாகனத்தை வழிமறித்து கார் கண்ணாடியை கல்லால் தாக்கி உடைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக ராஜேந்திரன் தனது குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றையும் கொடுத்துள்ளார். தன் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

Next Story
Share it