பிரபல நடிகர் வீட்டில் மாமியார் – மருமகள் சண்டை!!
பிரபல நடிகர் வீட்டில் மாமியார் – மருமகள் சண்டை!!

மறைந்த பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் மகளும், மருமகளும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பராசக்தி, பூம்புகார், மனோகரா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தவர் லட்சிய நடிகர் எஸ்எஸ்ஆர் என்றழைக்கப்படும் எஸ்.எஸ்.ராஜேந்திரன். அவரது மூத்த மகள் லட்சுமி தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் வீட்டிற்கு காவலாளியை நியமிப்பது தொடர்பாக லட்சுமிக்கும் அவரது மாமியாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. பின்னர் அது கைகலப்பாக மாறியிருக்கிறது. ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவர் தலை முடியை இன்னொருவர் பிடித்துக் கொண்டு, கட்டிப் புரண்டு சண்டை போட்டுள்ளனர்.

சம்பவத்தைப் பார்த்தவர்கள் போலீஸுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். லட்சுமியின் தாக்குதலில் காயமடைந்த மாமியார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பியதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே மாமியார் தன்னைத் தாக்கி விட்டதாக மருமகள் லட்சுமி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மறுபுறம் மருமகள் தன்னை தாக்கிவிட்டதாக மாமியாரும் எதிர்புகார் கொடுத்தார். தற்போது இரு புகார்கள் குறித்தும் போலீசார் விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
newstm.in

