Theme Check

ஹோட்டல் அறையில் சடலமாக கிடந்த பிரபல நடிகர்!!

ஹோட்டல் அறையில் சடலமாக கிடந்த பிரபல நடிகர்!!

ஹோட்டல் அறையில் சடலமாக கிடந்த பிரபல நடிகர்!!
X

ஹோட்டல் அறையில் பிரபல நடிகர் இறந்த கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல ஹாலிவுட் நடிகர் பாப் சகெட், பல்வேறு படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தனது தனித்துவமான உடல் மொழியால் நகைச்சுவைக்குப் பெயர்போனவர்.

இவர் ஓட்டல் அறையில் மர்மமான முறையில் உயிரிழந்தது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் பாப் சகெட் புளோரிடாவிலுள்ள ஒரு நட்சத்திர விடுதியில் அறை எடுத்துத் தங்கியிருந்தார்.

bob

கடந்த 9ஆம் தேதி அவரது அறை வெகு நேரமாகியும் திறக்காததால் ஊழியர்கள் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

ஓட்டல் நிர்வாகத்தினர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் உடற்கூராய்வு முடிவில், அவர் போதை மருந்து மற்றும் விஷம் போன்ற எதையும் உட்கொள்ளவில்லை என்பது தெரிவித்துள்ளது.

bob 1

மேலும் கொரோனா தொற்றுக்கான அறிகுறியும் அவருக்கு இல்லை எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதற்கிடையில், நடிகர் பாப் செகெட் பாத்ரூமில் தவறி விழுந்து தலையில் அடிபட்டுள்ளதாக குடும்பத்தாரிடம் போனில் தெரிவித்துள்ளார்.

இதனால் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

newstm.in

Next Story
Share it