போலீசாரை தாக்கிய பிரபல நடிகை கைது !!

போலீசாரை தாக்கிய பிரபல நடிகை கைது !!

போலீசாரை தாக்கிய பிரபல நடிகை கைது !!
X

மகாராஷ்டிரா மாநிலத்தில் வெப் சீரீஸ் நடிகை ஒருவர் பெண் காவலரை தாக்கியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகாவைச் சேர்ந்த 28 வயது வெப் சீரீஸ் நடிகை மகாராஷ்டிரா மாநிலம் அந்தேரியில் வசித்து வருகிறார். இவர் பிரபல வெப் சீரிஸ்களில் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் புனேவிற்கு சொந்த வேலைக்காக சென்றுள்ளார்.

அப்போது ஆன்லைன் மூலமாக ஹோட்டல் ஒன்றில் தங்கும் அறையை புக் செய்துள்ளார். ஆனால், ஹோட்டல் நிர்வாகம் வழங்கிய அறையில் போதிய வசதியில்லை எனக் கூறி ஹோட்டல் ஊழியர்களிடம் நடிகை சண்டை போட்டுள்ளார். அத்துடன், தான் செலுத்திய பணத்தை திரும்பத் தர வேண்டும் எனவும் தகராறு செய்துள்ளார்.

dsf

இந்நிலையில், ஹோட்டல் ஊழியர்கள், இவர் குறித்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து உள்ளூர் காவல்துறையினர் ஹோட்டலுக்கு சென்று விசாரித்துள்ளனர். அப்போது, அந்த நடிகை போலீசாரிடமும் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனை தடுக்க முயன்ற பர்வீன் ஷேக் என்ற பெண் காவலரை கையில் கடித்து அந்த நடிகை தாக்கியதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இவ்வாறு தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்ட நடிகை மீது 353, 332, 427, 504 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு கைது செய்துள்ளனர்.

newstm.in

Tags:
Next Story
Share it