Theme Check

பிரபல நடிகை மாரடைப்பால் மரணம்.. திரையுலகினர் இரங்கல்..!

பிரபல நடிகை மாரடைப்பால் மரணம்.. திரையுலகினர் இரங்கல்..!

பிரபல நடிகை மாரடைப்பால் மரணம்.. திரையுலகினர் இரங்கல்..!
X

‘கும்பளங்கி நைட்ஸ்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள மலையாள நடிகை அம்பிகா ராவ் மாரடைப்பால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 58.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகை அம்பிகா ராவ் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று (27-ம் தேதி) இரவு 10.30 மணியளவில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

அம்பிகா ராவ், கடந்த 2002-ம் ஆண்டு மலையாளத் திரையுலகில் திரைப்படத் தயாரிப்பாளர் பாலச்சந்திர மேனனின் ‘கிருஷ்ண கோபாலகிருஷ்ணா’ மூலம் உதவி இயக்குநராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

அத்துடன், மம்முட்டி நடித்த ‘ராஜமாணிக்யம்’ மற்றும் ‘தொம்மனும் மக்களும்’, பிருத்விராஜ் நடித்த ‘வெள்ளினக்ஷத்திரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் படங்களுக்கு உதவி இயக்குநராக பணிபுரிந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை அம்பிகா ராவ் மறைவுக்கு மலையாள திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Next Story
Share it