Theme Check

பிரபல நடிகை திடீர் மரணம்.. உடலுறுப்புகளை தானம் செய்ய முடிவு..!

பிரபல நடிகை திடீர் மரணம்.. உடலுறுப்புகளை தானம் செய்ய முடிவு..!

பிரபல நடிகை திடீர் மரணம்.. உடலுறுப்புகளை தானம் செய்ய முடிவு..!
X

பெங்களூருவை சேர்ந்தவர் ரச்சனா (39). சினிமா படங்களில் துணை நடிகையாக வலம் வந்த இவர், கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘சிம்பிள் ஆகி ஒன் லவ் ஸ்டோரி’ என்ற கன்னட படத்தில் நடிகர் ரக்சித் ஷெட்டியின் தங்கையாக நடித்து இருந்தார்.

அத்துடன், ‘ரேடியோ மிர்ச்சி’ என்ற வானொலி சேனலில் தொகுப்பாளராகவும் இருந்து வந்தார். தனது கலகலப்பான நிகழ்ச்சிகளால் ஏராளமான ரசிகர்கள் மனதைக் கவர்ந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை ரச்சனா தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ரச்சனா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, நடிகை ரச்சனாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

39 வயதான ரச்சனா உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்தி வந்தார். அப்படி இருக்கும்போது அவர் திடீரென்று மாரடைப்பால் மரணம் அடைந்தது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

ரச்சனா இறந்த செய்தியை அறிந்த கன்னட திரையுலகினர், சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் அதிர்ச்சியையும், இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.

Next Story
Share it