சிறுமிக்கு பாலியல் தொல்லை.. பிரபல நடிகைக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை !

சிறுமிக்கு பாலியல் தொல்லை.. பிரபல நடிகைக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை !

சிறுமிக்கு பாலியல் தொல்லை.. பிரபல நடிகைக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை !
X

பிரபல ஹாலிவுட் நடிகையான ஸாரா பைத்தியன் (Zara Phythian) மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. இவர் 2016ல் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற 'டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர். இவருக்கு இளம் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்திய வழக்கில் 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது நீதிமன்றம்.

zara phythian

நடிகை ஸாரா பைத்தியன், 13 முதல் 15 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. வழக்கு விசாரணை பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. சிறுமியை பாலியல் ரீதியாக தொல்லை செய்ய உடந்தையாக இருந்தது மற்றும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக நடிகை ஸாராவின் கணவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் கடந்த திங்கட்கிழமை நாட்டிங்காமில் உள்ள கிரவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. பலாத்கார வழக்கில் நடிகை ஸாராவின் கணவர் விக்டர் மார்க்கிற்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது

zara phythian

நடிகை ஸாராவுக்கு 8 ஆண்டுகளும் அவருடைய கணவருக்கு 14 ஆண்டுகளும் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது ஹாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ஹாலிவுட்டில் இதுபோன்ற பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் பாலியல் ரீதியான தொல்லை வழக்குகளில் சிக்கிவருவது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Tags:
Next Story
Share it