Theme Check

முக்கிய அரசியல் தலைவரை தரக்குறைவாக விமர்சித்த பிரபல நடிகை!!

முக்கிய அரசியல் தலைவரை தரக்குறைவாக விமர்சித்த பிரபல நடிகை!!

முக்கிய அரசியல் தலைவரை தரக்குறைவாக விமர்சித்த பிரபல நடிகை!!
X

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் குறித்து சமூக வலைதளத்தில் தரக்குறைவாக விமர்சித்த நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூகவலைதள வெறுப்பு பேச்சு என்பது அண்மை காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் தொடங்கி சினிமா ரசிகர்கள் வரை மாற்றி மாற்றி சமூக வலைதளங்களில் விமர்சித்து கொள்கின்றனர்.

அந்த வகையில், மராத்தி நடிகையான கேதகி சிதலே என்பவர், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பெயரையும், அவரது வயதையும் குறிப்பிட்டு, அவரது உடல்நல பிரச்னைகளை குறிக்கும் வகையிலும் மராத்தியில் கவிதையை வெளியிட்டார்.

sharad

மேலும் அப்பகுதியை சேர்ந்த ஒரு சமூகத்திற்கு எதிராக நடிகை கருத்து பதிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக மகாராஷ்ட்ரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்தன.

arrest

ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவின் தூண்டுதலின் பேரில் நடிகை கேதகி சிதலே விமர்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அந்த மராத்தி நடிகையை கைது செய்துள்ளனர்.

newstm.in

Next Story
Share it