Theme Check

இதய நோயில் இருந்து மீண்ட பிரபல கிரிக்கெட் வீரருக்கு புற்றுநோய் பாதிப்பு !

இதய நோயில் இருந்து மீண்ட பிரபல கிரிக்கெட் வீரருக்கு புற்றுநோய் பாதிப்பு !

இதய நோயில் இருந்து மீண்ட பிரபல கிரிக்கெட் வீரருக்கு புற்றுநோய் பாதிப்பு !
X

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெய்ன்ஸ் புற்றுநோயால் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான கிறிஸ் கெய்ன்ஸ் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். 5 மாதத்துக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவருக்கு பக்கவாதத்தால் கால்கள் செயல் இழந்தன. உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை நடந்து அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டு இப்போது உயிர் பிழைத்துள்ளார்.

ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்ற 51 வயதான கிறிஸ் கெய்ன்ஸ் கடந்த வாரம் வீடு திரும்பினார்.

chris-cairns

இந்த நிலையில் வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட கெய்ன்ஸ்க்கு குடலில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இந்த தகவலை கெய்ன்ஸ் தனது இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்துள்ளார். அதில், அடுத்தகட்ட போராட்டத்தை எதிர்நோக்கி இருப்பதாகவும், இந்த பிரச்சினை விரைவில் தீர்ந்து விடும் என நம்புகிறேன், என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவரது காலத்தில் கிறிஸ் கெய்ர்ன்ஸ் ஒரு சிறந்த ஆல் ரவுண்டராக வலம் வந்தார், குறிப்பாக ஒரு நாள் போட்டிகளில் அவர் தனிச்சிறப்பான வீரராக விளங்கினார். கிறிஸ் கெய்ர்ன்ஸின் தந்தை லான்ஸும் நியூசிலாந்து தேசிய அணிக்காக விளையாடியவர் தான்.

தனது கிரிக்கெட் கேரியரில் நியூசிலாந்து அணிக்காக 62 டெஸ்ட், 215 ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரண்டு டி20 போட்டிகளிலும் கிறிஸ் கெய்ர்ன்ஸ் விளையாடியுள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அவர் தொலைக்காட்சிகளில் கிரிக்கெட் வர்ணணை செய்பவராக மாறினார்.

newstm.in

Tags:
Next Story
Share it