பிரபல இயக்குநர் காலமானார்.. நாடகம், திரைத்துறையினர் இரங்கல்..!

பிரபல இயக்குநர் காலமானார்.. நாடகம், திரைத்துறையினர் இரங்கல்..!

பிரபல இயக்குநர் காலமானார்.. நாடகம், திரைத்துறையினர் இரங்கல்..!
X

பிரபல நாடக இயக்குநர் பீட்டர் புரூக் லண்டனில் காலமானார். அவருக்கு வயது 97. அவருடைய மறைவுக்கு சர்வதேச அளவில் நாடகம் மற்றும் திரைத்துறையினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

லண்டனில் உள்ள யூத விஞ்ஞானிகளின் குடும்பத்தில் கடந்த 1925-ம் ஆண்டு மார்ச் மாதம் 21-ம் தேதி பிறந்தவர் பீட்டர் புரூக். 1970-களில் பாரிஸ் சென்று பல நாடகங்களை இயக்கினார். 1997-ல் அவர் மீண்டும் லண்டன் திரும்பினார்.

கடந்த 1985-ம் ஆண்டு, 9 மணி நேரம் ஓடக்கூடிய மகாபாரத இதிகாசத்தை இயக்கினார். பீட்டர் புரூக் இயக்கிய பல நாடகங்களில் அவரது மனைவி நடாஷா பியாரி முக்கிய வேடங்களில் நடித்தார்.

20-ம் நூற்றாண்டின் மிகவும் திறமையான நாடக இயக்குநர்களில் ஒருவரான பீட்டர் புரூக், 90 வயதை கடந்தும் தனது நடிப்பால் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார்.

இந்நிலையில், வயது மூப்பு மற்றும் அதனால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பீட்டர் புரூக், கடந்த சனிக்கிழமை லண்டனில் காலமானார்.

அவருடைய மறைவுக்கு சர்வதேச அளவில் நாடகம் மற்றும் திரைத்துறையினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags:
Next Story
Share it