பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மரணம்.. நடிகர், நடிகைகள் இரங்கல் !!
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மரணம்.. நடிகர், நடிகைகள் இரங்கல் !!

பிரபல திரைப்படத் தயாரிப்பார் நாராயண் தாஸ் நரங் உடல்நலக் குறைவால் இறந்தார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த மூத்த திரைப்படத் தயாரிப்பாளர் நாராயண் தாஸ் நரங் (76), உடல்நலக் குறைவால் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு மருத்துவர்கள் தனியாக கண்காணித்து அவருக்கு சிகிச்சை அளித்துவந்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவரது இறுதிச் சடங்கு இன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது அப்போது நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் டோலிவுட் பிரமுகர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில் மறைந்த நாராயண் தாஸ் நரங்கின் மகன் சுனில் நரங்கும் முன்னணி திரைப்பட தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த நாராயண் தாஸ் நரங், கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக 650க்கும் மேற்பட்ட படங்களுக்கு நிதியளித்துள்ளார். ஐதராபாத்தில் அமைந்துள்ள பிரபலமான மல்டிபிளக்ஸ் குழுமத்தின் தலைவராகவும் இருந்தார்.; தெலுங்கு திரைப்பட வர்த்தக சபையின் தலைவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நாராயண் தாஸ் நரங் மறைவுக்கு தெலுங்கு நடிகர்கள் நாகார்ஜுனா , சிரஞ்சீவி, மகேஷ் பாபு உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Shocked and saddened by the demise of #NarayanDasNarang garu. A prolific figure in our film industry.. his absence will be deeply felt. A privilege to have known and worked with him. pic.twitter.com/SLe1OCCOeZ
— Mahesh Babu (@urstrulyMahesh) April 19, 2022
newstm.in

