Theme Check

பிரபல வாரிசு நடிகைக்கு கொரோனா தொற்று!!

பிரபல வாரிசு நடிகைக்கு கொரோனா தொற்று!!

பிரபல வாரிசு நடிகைக்கு கொரோனா தொற்று!!
X

பிரபல வாரிசு நடிகையான ஸ்ருதி ஹாசனுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா 3ஆவது தற்போது குறைந்துவிட்டது. ஆனால் ஜூன் 22ஆம் தேதி நான்காவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக ஐஐடி கான்பூர் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா அலை குறைந்திருந்தாலும், பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

shruti_haasan

மருத்துவமனைகளில் சேர்ந்தும், வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வகையில் தற்போது உலக நாயகன் கமல்ஹாசனின் மகளான நடிகை ஸ்ருதி ஹாசன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனை ஸ்ருதி தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதனை சரி செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக கூறியுள்ள அவர், விரைவில் நலம்பெற்று திரும்புவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Shruti-Haasan

இந்த பதிவை பார்த்த பிரபலங்கள் பலரும் அவர் விரைவில் நலம் பெற வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகர் கமல்ஹாசன் கடந்த நவம்பர் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். 2 வார சிகிச்சைக்கு பிறகு அவர் நலம் பெற்று வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in


Next Story
Share it