பிரபல தயாரிப்பாளர் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

பிரபல தயாரிப்பாளர் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

பிரபல தயாரிப்பாளர் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!
X

தமிழ்த் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் டி. ராமராவ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 83. அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த் - பாக்யராஜ் நடித்த ‘நான் சிகப்பு மனிதன், ரஜினிகாந்த் நடித்த ‘அதிசயபிறவி’, விஜய் நடித்த ‘யூத்’, விக்ரம் நடித்த ’அருள்’, விஷால் நடித்த ’மலைக்கோட்டை’ உட்பட பல படங்களை தயாரித்தவர் டி.ராமராவ்.
ரஜினிகாந்த், விஜய் படத் தயாரிப்பாளர் டி.ராமராவ் காலமானார் | Rama Rao a  senior producer and director has passed away | Puthiyathalaimurai - Tamil  News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
அதுமட்டுமின்றி, தமிழில் சூப்பர் ஹிட் ஆன ‘நீதிக்கு தண்டனை’, ‘புலன் விசாரணை’, ‘சேரன் பாண்டியன்’, ‘நாட்டாமை’ ஆகிய படங்களின் தெலுங்கு ரீமேக் உட்பட பல தெலுங்கு திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார்.

இந்நிலையில், வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்ட தயாரிப்பாளர் டி.ராமராவ், சென்னை தி.நகரில் உள்ள அவருடைய இல்லத்தில் நேற்று காலமானார்.
அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், விஜய் ஆகியோரை வைத்து திரைப்படங்களைத் தயாரித்த  மூத்த தயாரிப்பாளரும் இயக்குநருமான டி ராமராவ் காலமானார் ...
அவருடைய இறுதிச் சடங்குகள் இன்று (20-ம் தேதி) மாலை 4 மணி அளவில் நடைபெறும் என அவரது குடும்பத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட டி.ராமராவ் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags:
Next Story
Share it