பிரபல துணை நடிகைக்கு பாலியல் தொல்லை.. ஒளிப்பதிவாளர் கைது !!

பிரபல துணை நடிகைக்கு பாலியல் தொல்லை.. ஒளிப்பதிவாளர் கைது !!

பிரபல துணை நடிகைக்கு பாலியல் தொல்லை.. ஒளிப்பதிவாளர் கைது !!
X

துணை நடிகைக்கு பாலியல் தொல்லை அளித்த பிரபல ஒளிப்பதாளர் காசிநாதன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகையாக சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நடித்து வருகிறார். இந்த இளம்பெண்ணுக்கு திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக வேலை செய்யும் காசிநாதன் (42) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் இருவரும் துறைரீதியாக நண்பர்களாக பழகிவந்துள்ளனர். இந்த நிலையில் திரைப்படங்களில் கதாநாயகி வாய்ப்பு வாங்கித் தருவதாக துணை நடிகையிடம் காசிநாதன் ஆசை வார்த்தை கூறியுள்ளார். மேலும் புகைப்படம் எடுக்க வேண்டும் எனக்கூறி தன்னுடைய வீட்டிற்கு துணை நடிகையை காசிநாதன் அழைத்துள்ளார்.

girl

காசிநாதனை நம்பி அவரது வீட்டிற்கு துணை நடிகை சென்றுள்ளார். அப்போது மது போதையிலிருந்த காசிநாதன், துணை நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவரிடம் தப்பித்த துணை நடிகை காசிநாதன் குறித்து வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து காசிநாதனை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ஏற்கனவே, சினிமா துறையில் படவாய்ப்புக்காக வரும் இளம்பெண்களை சிலர் சீரழித்து வருவதாகவும், பாலியல் தொல்லைகள் அதிகம் நடப்பதாகவும் புகார் உள்ளது. இந்த நிலையில் ஒளிப்பதிவாளரின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in


Tags:
Next Story
Share it