Theme Check

பிரபல தபேலா கலைஞர் மரணம்.. திரைத்துறையினர் அஞ்சலி..!

பிரபல தபேலா கலைஞர் மரணம்.. திரைத்துறையினர் அஞ்சலி..!

பிரபல தபேலா கலைஞர் மரணம்.. திரைத்துறையினர் அஞ்சலி..!
X

சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், ஹிந்தி, தெலுங்கு என புகழ்பெற்ற இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய 4 தலைமுறை கண்ட தபேலா கலைஞர் பிரசாத் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 80.

இசைஞானி இளையராஜா இசையில் வந்த ‘பூவே செம்பூவே’, ‘வா வெண்ணிலா’, ‘ஒரு நாளும் உனை மறவாத’, ‘மதுரை மரிக்கொழுந்து வாசம்’, ‘போவோமா ஊர்கோலம்’ போன்ற பல பாடல்களுக்கு தபேலா வாசித்தவர் பிரசாத்.
தபேலா பிரசாத் காலமானார்...நான்கு தலைமுறை இசையமைப்பாளர்களிடம் தபேலா  வாசித்தவர் | Tabla Prasad who played tabla to four generations of composers  has passed away - Tamil Filmibeat
தனது ஏழு வயதில் தபேலா வாசிக்கத் தொடங்கிய பிரசாத், 65 வருடங்களுக்கு மேலாக ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற பல முன்னணி இசையமைப்பாளர்களுக்கு தபேலா வாசித்துள்ளார்.

வயது மூப்பு காரணமாக சமீப காலமாக உடல் நலிவுற்ற நிலையில் இருந்த பிரசாத் நேற்றிரவு சென்னையில் காலமானார். அவரது மரணம் குறித்து செய்தியறிந்த அவருடைய மாணவர்கள், இசைத் துறையினர் மற்றும் திரைத்துறையினர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Next Story
Share it