ரசிகர் மரணம்.. வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் சூர்யா !!

ரசிகர் மரணம்.. வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் சூர்யா !!

ரசிகர் மரணம்.. வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் சூர்யா !!
X

விபத்தில் உயிரிழந்த ரசிகரின் குடும்பத்திற்கு நடிகர் சூர்யா நேரில் சென்று ஆறுதல் கூறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் (25) தீவிர நடிகர் சூர்யா ரசிகர் ஆவார். இவருக்கு திருமணமாகி ராதிகா என்ற மனைவியும் 2 வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி நாமக்கல் துறையூர் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, லாரி மோதிய விபத்தில் அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், உயிரிழந்த ஜெகதீஷ், நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகராக இருந்து வருவதோடு, 15 ஆண்டுகளாக தீவிரமாக மன்ற பணியாற்றியும் வந்துள்ளார். இதையடுத்து உயிரிழந்த ரசிகரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக, நாமக்கல் மேட்டுத் தெருவில் உள்ள அவரது இல்லத்திற்கு நடிகர் சூர்யா சென்றார். அப்போது, உயிரிழந்த ஜெகதீஷின் மனைவி ராதிகா மற்றும் அவரது உறவினர்களுக்கு கண் கலங்கியவாறு ஆறுதல் தெரிவித்து ஜெகதீஷின் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

surya

இந்த சம்பவம் அங்கு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவரது குடும்பத்துக்கு உதவுவதாகவும் நடிகர் சூர்யா உறுதி அளித்தார்.

இதுகுறித்து உயிரிழந்த ஜெகதீஷின் மனைவி ராதிகா கூறுகையில், உடன்பிறந்த சகோதரர் போன்று நேற்று நடிகர் சூர்யா ஆறுதல் தெரிவித்தார். சூரியா அவர்கள் வருவதை எதிர் பார்க்கவில்லை;. குழந்தையின் நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும் ரசிகர் மன்றத்தின் சார்பில் அனைத்து உதவிகளையும் செய்வதாக அவர் வாக்குறுதி அளித்தார்.

மேலும் தனது குழந்தையின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு தனக்கு ஏதாவது வேலை ஏற்பாடு செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தேன் அதனை நிறைவேற்றித் தருவதாக நடிகர் சூர்யா தெரிவித்ததாக ராதிகா கண் கலங்கியபடி கூறினார்.

newstm.in

Tags:
Next Story
Share it