Theme Check

நாளை முதல் கட்டணம் உயர்வு.. எதுக்கு எவ்வளவு தெரியுமா..?

நாளை முதல் கட்டணம் உயர்வு.. எதுக்கு எவ்வளவு தெரியுமா..?

நாளை முதல் கட்டணம் உயர்வு.. எதுக்கு எவ்வளவு தெரியுமா..?
X

சென்னை புறநகரில் உள்ள சூரப்பட்டு மற்றும் வானகரம் சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை ரூ.10 முதல் ரூ.40 வரை அதிகரித்து மத்திய அரசின் நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, வானகரம் சுங்கச்சாவடியில் ஒருமுறை சென்று வரக்கூடிய கார், ஜீப், வேன்களுக்கு ரூ.45-ல் இருந்து ரூ.50 ஆகவும், ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.65-ல் இருந்து ரூ.75 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல, சூரப்பட்டு சுங்கச்சாவடியில் ஒருமுறை சென்று வரக்கூடிய கார், ஜீப், வேன்களுக்கு ரூ.60-ல் இருந்து ரூ.70 ஆகவும், ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.90 -ல் இருந்து ரூ.100 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை புறநகரில் உள்ள வானகரம், பரனூர், சூரப்பட்டு, சென்னசமுத்திரம், நெமிலி ஆகிய 5 சுங்கச்சாவடிகளை அகற்றுமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு அண்மையில் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த கட்டண உயர்வு அமல் படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story
Share it