வேகமாக மோதிய கார்.. தூக்கி எறியப்பட்ட இரு சக்கர வாகனம் ... 4 வயது சிறுவன் பலி..!!
வேகமாக மோதிய கார்.. தூக்கி எறியப்பட்ட இரு சக்கர வாகனம் ... 4 வயது சிறுவன் பலி..!!

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அடுத்த வெங்கடேஷ்வராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மார்சல் ராஜா (38). காடல்குடி காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வரும் இவருக்கு தேவிகா (30) என்ற மனைவியும், ரஸ்வந்த் (6), ரிஷாந்த் (4) என இரு மகன்கள் உள்ளனர்.

நேற்று திட்டங்குளத்தில் இருந்து மார்சல் ராஜா தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது தொழிற்பேட்டை அருகே சாலையை கடக்க முயன்ற போது எட்டயபுரத்தில் இருந்து கோவில்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் மார்சல் ராஜா உள்பட 4 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இதனைக் கண்ட அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் 4 பேரையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் சிறுவன் ரிஷாந்த் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதில் பலத்த காயமடைந்த மார்சல் ராஜா மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து வந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த சிவராமச்சந்திரன் (24) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

