Theme Check

மனைவி ஃபோனை எடுக்காததால் 5 வயது மகனை கொடூரமாக தாக்கிய தந்தை!!

மனைவி ஃபோனை எடுக்காததால் 5 வயது மகனை கொடூரமாக தாக்கிய தந்தை!!

மனைவி ஃபோனை எடுக்காததால் 5 வயது மகனை கொடூரமாக தாக்கிய தந்தை!!
X

கோவையில் மனைவி ஃபோனை எடுக்காத ஆத்திரத்தில் 5 வயது குழந்தையை தந்தை கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுக்கரை அறிவொளி நகர் பகுதியைச் சேர்ந்த சாதிக்பாஷா - ரெஜினா பானு தம்பதிக்கு 10 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் மூத்த மகன் அம்மாவுடன் வசித்து வரும் நிலையில், இளைய மகன் தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இதனிடையே பெற்ற மகனை தந்தை சாதிக் பாஷா கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தந்தை சாதிக் பாஷாவை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

cbe

விசாரணையில் தனது மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்பிய நிலையில், ஆனால் அவர் செல்போனில் தொடர்பு கொண்டபோது அழைப்பை ஏற்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் இளைய மகனை மட்டும் ரெஜினா சந்தித்ததால், ஆத்திரத்தில் மது போதையில் சொந்த மகனை தாக்கியதாக விசாரணையில் தெரியவந்தது.

மேலும் மதுபோதையில் தனது மகனை, அவரது தந்தை அடித்ததாக அப்பகுதி மக்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து போலீஸார் அவரை வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

newstm.in

Next Story
Share it