Theme Check

சிறுவர்கள் பைக் ஓட்டினால் தந்தைக்கு 3 ஆண்டுகள் சிறை.. காவல்துறை புதிய நடவடிக்கை !

சிறுவர்கள் பைக் ஓட்டினால் தந்தைக்கு 3 ஆண்டுகள் சிறை.. காவல்துறை புதிய நடவடிக்கை !

சிறுவர்கள் பைக் ஓட்டினால் தந்தைக்கு 3 ஆண்டுகள் சிறை.. காவல்துறை புதிய நடவடிக்கை !
X

இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கம், வாகன எண்ணிக்கை அதிகரிப்பால் விபத்துகளும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் சாலை விபத்துகளை குறைக்க மத்திய, மாநில அரசுகள், பல்வேறு தொண்டு நிறுவனங்கள் வாகன ஓட்டிகளிடம் விழிப்பிணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அதேநேரத்தில், சிறுவர்கள் வாகனங்களை இயக்குவதால் விபத்துகள் அதிகரிக்கின்றன என்ற புகாரும் உள்ளது. எனவே இதுபோன்ற விதி மீறல்களை தடுக்கும் வகையில் உத்தரபிரதேச மாநிலம் நொய்டா பெருநகர காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளனர்.

இந்த நடவடிக்கையின்படி, இனி சிறுவர்கள் வாகனங்களை ஓட்டி வந்தால், அவர்களது பெற்றோருக்கு ரூ.25,000 வரையில் அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

jail

கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டு, நொய்டா நகரில் போக்குவரத்து சேவை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் சூழலில் இத்தகைய நடவடிக்கையை காவல் துறையினர் மேற்கொண்டுள்ளனர். இரு சக்கர வாகனங்கள் அல்லது கார் ஓட்டி வரும் சிறுவர்கள் பிடிபட்டால், இந்திய தண்டனையியல் சட்ட விதிகளின்படி பெற்றோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறுவர்கள் வாகனங்களை ஓட்டக் கூடாது என்ற எச்சரிக்கையை பெற்றோருக்கு கொண்டு சேர்ப்பது மட்டுமல்லாமல், பள்ளிகளிலும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it